கலவை அருகே உள்ள குப்பிடிசாத்தம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் மனைவி குப்பு (எ) குப்பம்மாள் (56). இவர் கடந்த 12ம் தேதி ஆட்டுக்கு தேவையான தழை உடைக்க மரத்தில் ஏறியதாக தெரிகிறது.

இதில், எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து தவறி தலைகீழாக விழுந்து படுகாயமடைந்த அவரை அப்பகுதிமக்கள் மீட்டு மாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தினர். 

மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று குப்பம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது கணவர் லோகநாதன் வாழைப்பந்தல் போலீசில் அளித்த புகாரின்பேரில், எஸ்ஐ ரமேஷ் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகிறார்.