மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பாத்திரத்தில் புதிய மஞ்சள் இலைகள் கட்டிய பாத்திரத்தில் பொங்கலை செய்வார்கள். அந்த பொங்கல் பொங்கி வந்ததும், மக்கள் "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சியாகவும் சத்தமுடனும் கூறுவார்கள். 

பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல் பொங்குதல்' என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை.

பொங்கல் வைக்க நல்ல நேரம் | pongal vaikka nalla neram 2023


தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம்:


தைமாதம் 1 ம்நாள் 15/01/2023 ஞாயிற்றுக்கிழமை 
காலை 6.33. முதல் 7.51வரை

பூஜை காலை 8.00 முதல் 9.00 வரை

ஆலயதரிசனம் 
காலை9.00 முதல்11.30வரை

மாட்டுப் பொங்கல் பூஜை செய்ய நல்ல நேரம்:


மாட்டுப்பொங்கல் 16/01/2023 திங்கள்கிழமை மாலை 6.00 முதல் 6.30வரை

பூஜை மாலை 7.00 முதல் இரவு 8.00வரை

2023 தைப்பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரம்..!


உலக இந்துக்களால் வருட தொடக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே தைப்பொங்கல் ஆகும்.

உழவர்களும், உழவுக் காளைகளுமே இந்தத் திருநாளின் நாயகர்கள்.

கதிர் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்பட்டதே பொங்கல்.

சூரியனின் பயணம்
சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம்.

இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றது.

வெளிநாடுகளில் இருப்பவர்கள், காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.

மேற் குறிப்பிடப்பட்ட கெளரி முகூர்த்த நேரங்களில் பூஜை வழிபாடுகளை செய்து பரிபூரணசித்தியை பெற்று வளமோடு வாழ நல்வாழ்த்துகளும், குரு ஆசிகளும் உரித்தாகுக...!

தைத்திருமகளின் வருகை தரணியெங்கும் தமிழ்மணம்பரப்பி அனைவர் வாழ்வையும் செழிப்பால் நிரப்பட்டும்..!