👉 1917ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் டி.ஆர்.இராமச்சந்திரன் கரூர் மாவட்டத்தில் பிறந்தார்.

👉 1921ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது.


முக்கிய தினம் :-


வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

🌟 வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பாடுபடுகின்றனர். அவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.

🌟 மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜனவரி 9, 1915ஆம் ஆண்டு (மும்பாய்) இந்தியா திரும்பினார். காந்தி தாயகம் திரும்பிய நாளை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி 9ஆம் தேதியை வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக 2002ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. 2003ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


பிறந்த நாள் :-


ஹர் கோவிந்த் குரானா

🌸 மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான குரானா 1922ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் ராய்ப்பூர் கிராமத்தில் பிறந்தார்.

🌸 இவர் 1959ஆம் ஆண்டு மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாத இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்தார். இது தொடர்பான ஆய்வு மூலம் மரபுவழியிலான சில நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது.

🌸 இந்த ஆய்வுக்காக 1968ஆம் ஆண்டு இவருக்கும் நிரென்பர்க், ஹாலி ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. மேலும் மரபுக்குறியீடு (Genetic code), எஸ்கிரிஷியா கோலி (Escherichia coli) என்னும் நுண்ணுயிரிகளின் மரபணு உருவாக்கம் போன்ற ஆய்வுகளில் இவருடைய குழுவினரும் ஈடுபட்டனர்.

🌸 அதன்பின் இந்த நுண்ணுயிரியின் சுமார் 207 மரபணுக்களை இவர்கள் செயற்கையாக உருவாக்கினர். புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதிலும் இவர் மகத்தான பங்காற்றியுள்ளார். 

🌸 முதன்முறையாக செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்த அறிவியல் மேதை ஹர் கோவிந்த் குரானா தனது 89வது வயதில் (2011) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


👉475 – பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

👉1150 – சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார். வன்யான் லியாங் பேரரசராக முடிசூடினார்.

👉1349 – கறுப்புச் சாவுக்குக் காரணமென உள்ளூர் மக்களால் நம்பப்பட்டதால், பேசெல் நகர யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

👉1431 – ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

👉1707 – இசுக்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துப் பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

👉1760 – அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்கள் மரதர்களை பராரி மலைகளில் நடைபெற்ற சமரில் தோற்கடித்தனர்.

👉1788 – கனெடிகட் அமெரிக்காவின் 5வது மாநிலமாக இணைந்தது.

👉1792 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

👉1799 – பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் நெப்போலியப் போர்களுக்கு நிதி சேர்ப்பதற்காக வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.

👉1816 – ஹம்பிரி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார்.

👉1822 – போர்த்துக்கீச மன்னர் ஆறாம் யோவானின் கட்டளைக்கு மாறாக போர்த்துக்கீச இளவரசர் முதலாம் பெத்ரோ பிரேசிலில் தங்கியிருக்க முடிவு செய்தார். பிரேசில் விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.

👉1857 – கலிபோர்னியாவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் பதியப்பட்டது.

👉1858 – டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

👉1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இரண்டாவது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது.

👉1878 – இத்தாலியின் மன்னனாக முதலாம் உம்பேர்ட்டோ முடி சூடினார்.

👉1905 – உருசியத் தொழிலாளர் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் குளிர்கால அரண்மனையை முற்றுகையிட்டனர். சார் மன்னரின் படைகள் பலரைச் சுட்டுக் கொன்றன. (ஜூலியன் நாட்காட்டியின் படி). இந்நிகழ்வே 1905 உருசியப் புரட்சி ஆரம்பமாவதற்கு வழிகோலியது.

👉1909 – தென் முனைக்கு சென்ற எர்னஸ்டு சாக்கில்டன் தலைமையிலான குழு தென் முனையில் இருந்து 97 கடல் மைல் தொலைவில் பிரித்தானியக் கொடியை நாட்டியது.

👉1915 – மோகன்தாசு கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த இந்நாள் வெளிநாடுவாழ் இந்தியர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

👉1916 – முதலாம் உலகப் போர்: உதுமானியர்களின் வெற்றியுடன் கலிப்பொலி போர்த்தொடர் முடிவுக்கு வந்தது.

👉1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

👉1927 – கனடா, மொண்ட்ரியால் நகரில் நாடக அரங்கு ஒன்றில் தீ பரவியதில் 78 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

👉1951 – ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

👉1957 – சூயசு கால்வாயை எகிப்திடம் இருந்து மீலப்பெறத் தவறியமைக்காக பிரித்தானியப் பிரதமர் சர் அந்தோனி ஏடென் பதவி துறந்தார்.

👉1964 – மாவீரர் நாள்: பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.

👉1972 – ஆங்காங்கில் குயீன் எலிசபெத் கப்பல் தீக்கிரையானது.

👉1974 – யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்தது.

👉1990 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

👉1991 – ஈராக்கின் குவைத் மீதான படையெடுப்பு குறித்து சுமுகமான தீர்வு காண்பதற்காக அமெரிக்க, ஈராக்கியப் பிரதிநிதிகள் ஜெனீவாவில் சந்தித்தனர்.

👉1991 – லித்துவேனியாவின் விடுதலைக் கோரிக்கையை நசுக்குவதற்காக சோவியத் ஒன்றியம் வில்னியஸ் நகரை முற்றுகையிட்டது.

👉1992 – யுகோசுலாவியாவில் சிறுப்ஸ்கா குடியரசு என்ற புதிய குடியரசு நிறுவப்பட்டது.

👉1992 – முதற்தடவையாக சூரியமண்டல புறவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

👉2001 – சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்டது.

👉2004 – சட்டவிரோத அல்பேனியக் குடியேறிகளை இத்தாலிக்குஏற்றிச் சென்ற படகு ஒன்று கரபுருன் குடாவில் மூழ்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.

👉2005 – பலத்தீன தேசிய ஆணையத்தின் தலைவராக மகுமுது அப்பாசு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

👉2005 – சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கென்யாவில் கையெழுத்திடப்பட்டது.

👉2007 – ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஐ-போனை சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தினார்.

👉2011 – ஈரான் விமானம் ஒன்று ஊர்மியா நகருக்கருகில் வீழ்ந்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


👉1554 – பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1623)

👉1843 – நடனகோபாலநாயகி சுவாமிகள், சௌராட்டிர மதகுரு (இ. 1914)

👉1868 – சோரென்சென், தென்மார்க்கு வேதியியலாளர் (இ. 1939)

👉1879 – ஜான் பி வாட்சன், அமெரிக்க மருத்துவர் (இ. 1958)

👉1902 – ஓசேமரிய எஸ்கிரிவா, எசுப்பானிய மதகுரு, புனிதர் (இ. 1975)

👉1908 – சிமோன் த பொவார், பிரான்சிய மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1986)

👉1913 – ரிச்சர்ட் நிக்சன், அமெரிக்காவின் 37வது அரசுத்தலைவர் (இ. 1994)

👉1917 – டி. ஆர். ராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1990)

👉1922 – ஹர் கோவிந்த் கொரானா, நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க உயிரிவேதியியலாளர் (இ. 2011)

👉1927 – சுந்தர்லால் பகுகுணா, இந்திய சூழலியலாளர்

👉1927 – துரைசாமி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (இ. 1971)

👉1928 – பாலக்காடு ஆர். ரகு, தென்னிந்திய மிருதங்க கலைஞர் (இ. 2009)

👉1933 – குறமகள், ஈழத்து எழுத்தாளர் (இ. 2016)

👉1933 – வில்பர் ஸ்மித், சாம்பிய-ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர்

👉1934 – மகேந்திர கபூர், இந்தித் திரைப்படப் பாடகர் (இ. 2008)

👉1951 – ஒய். ஜி. மகேந்திரன், தமிழகத் திரைப்பட, நாடக நடிகர்

👉1952 – கௌசிக் பாசு, இந்தியப் பொருளியலாளர்

👉1959 – இரிகொபெர்த்தா மெஞ்சூ, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற குவாத்தமாலா செயற்பாட்டாளர்

👉1976 – ராகவா லாரன்ஸ், இந்திய நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர்

👉1980 – நிதின் சத்யா, தமிழ்த் திரைப்பட நடிகர்

👉1982 – கேத்தரின், கேம்பிரிட்ச் சீமாட்டி

👉1989 – நீனா டோப்ரேவ், பல்கேரிய-கனடிய நடிகை

இன்றைய தின இறப்புகள்


👉1848 – கரோலின் எர்ழ்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (பி. 1750)

👉1873 – பிரான்சின் மூன்றாம் நெப்போலியன் (பி. 1808)

👉1924 – பொன்னம்பலம் அருணாசலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1853)

👉1961 – எமிலி கிரீன் பால்ச், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1867)

👉1979 – கு. கோதண்டபாணி, தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1896)

👉1992 – பில் நாக்டன், ஆங்கிலேய நாடகாசிரியர் (பி. 1910)

👉1998 – கெனிச்சி புகுயி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய வேதியியலாளர் (பி. 1918)

👉2004 – நிசீம் எசெக்கியேல், இந்தியக் கவிஞர், எழுத்தாளர், நாடகாசிரியர் (பி. 1924)

👉2013 – ஜேம்ஸ் எம். புக்கானன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1919)

👉2013 – ரிசானா நபீக், சவூதி அரேபியாவில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் (பி. 1988)

👉2014 – தாலே தோமஸ் மார்டென்சென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1939)

👉2021 – நவரத்தினம் கேசவராஜன், ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1962)

இன்றைய தின சிறப்பு நாள்


👉தியாகிகள் நாள் (பனாமா)

👉வெளிநாடுவாழ் இந்தியர் நாள்

👉அமைதி உடன்பாடு நாள் (தெற்கு சூடான்)