மனிதனின் எதிர்காலம் மற்றும் அவனை பற்றிய தகவல்களை உள்ளங் கையின் அமைப்பு மற்றும் அதன் வரிகளை கொண்டு கணிக்க முடியும் என்பது கைரேகை சாஸ்திரம் கூறும் நிரூபணம்.
ஆண்களுக்கு வலது பக்கமும் பெண்களுக்கு இடது பக்கமுமே உடலில் வலுவான பகுதிகள்னு முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாடியே கணிச்சு சொல்லிருக்காங்க. 

மனிதர்களோட செயல்பாடுகள கட்டுப்படுதுறதுல பெரிய பங்கு இதுக்கு இருக்காம். இதுனால தான் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடது கையும் பார்த்து ஜோசியம் சொல்றாங்க.

கர்ப்ப காலத்துல பெண்கள் கீழ உட்கார்ந்து எழுந்திரிக்கும்போது உடல் சுமைய தாங்கி எழுந்திரிக்க கை ஊணி எழுந்திரிப்பாங்க . 

பெரும்பாலும் வலது கை ஊணி எழுந்திரிச்சா அவங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்னும் , இடது கை ஊணி எழுந்திரிச்சா பெண் குழந்தை பிறகும்னும் நம்ம முன்னோர்கள் நம்பினாங்க , இன்னும் பரவலா இது நம்பப்படுது.