ஆற்காடு அடுத்த அருங்குன்றம் பகுதியை சேர்ந்த 21வயது மாணவி மேல்விஷாரம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

விடுதியில் தங்கிபடித்து வந்த இவர் கடந்த 27-ந் தேதி கல்லூரியிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் கல்லூரிக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

இது குறித்து அவரது உறவினர் ஆற்காடு டவுன் போலீ சில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.