குறள் : 1051

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று.


மு.வ உரை :

இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும் அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி தமக்கு பழி அன்று.


கலைஞர் உரை :

கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல


சாலமன் பாப்பையா உரை :

ஏதும்? இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.


Kural 1051

Irakka Iraththakkaark Kaanin Karappin

Avarpazhi Thampazhi Andru


Explanation :

If you meet with those that may be begged of you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.


Horoscope Today: Astrological prediction for March 15, 2023


இன்றைய ராசிப்பலன் - 15.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


15-03-2023, பங்குனி 01, புதன்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.46 வரை பின்பு தேய்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் காலை 07.33 வரை பின்பு மூலம். சித்தயோகம் காலை 07.33 வரை பின்பு மரணயோகம். பைரவர் வழிபாடு நல்லது. காருடையான் நோன்பு. நோன்பு நேரம் அதிகாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 


இன்றைய ராசிப்பலன் - 15.03.2023 | Today rasi palan - 15.03.2023

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சற்று சுமாராக இருக்கும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். உடன் பிறப்புகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் லாபம் அடைய முடியும்.

ரிஷபம்

இன்று மன குழப்பத்துடன் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும். 

கடகம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

சிம்மம்

இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

கன்னி

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

துலாம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.

விருச்சிகம்

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மன சங்கடங்கள் ஏற்படலாம். உறவினர்களிடம் ஏற்படும் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள்.

தனுசு

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை கூடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும்.

மகரம்

இன்று நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருளாதார நிலை பாதிப்படையாது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். 

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001