வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் அன்வர் பாஷா (வயது 29) மெக்கானிக்கான இவர் தனது மனைவி பாத்திமா சோனாஸ் மற்றும் இரண்டு மகள்களுடன் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தென்நந்தியாலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இந்தநிலையில் இவருக்கு போதுமான வருமானம் இல்லாததாலும், கடன் தொல்லை காரணத்தினாலும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவரது மனைவி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.