சோளிங்கர் லட்சுமிநரசிம்மர் கோவில் வளாகத்தில் யோக நரசிம்மர் கோவில், யோக ஆஞ்சநேயர் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில், தக்கான்குளம் ஆஞ்சநேயர் கோவில், மலை அடிவாரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை திறந்து காணிக்கை பணத்தை எண்ணும் பணி உதவி ஆணையர் ஜெயா மேற்பார்வையில் நடந்தது. இதில் 42 லட்சத்து 95 ஆயிரத்து 302 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

மேலும் 202 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளியும் இருந்தது. அவை அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றம் கிஷோர், பணியாளர்கள் உடனிருந்தனர்.