👉 இன்று உலக ஜோதிட தினம், சர்வதேச பிராங்கோபோனி தினம் ஆகியவை கடைபிடிக்கப்படுகிறது.


👉 1925ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி 35வது இந்தியத் தலைமை ஆளுநர் கர்சன் பிரபு மறைந்தார்.


முக்கிய தினம் :-


சர்வதேச மகிழ்ச்சி | International Hapiness Day

😃 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது.

😃 மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தை கூறுவார்கள். போரையும், வறுமையையும் உலகளவில் முடிவுக்கு கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா.சபை கருதுகிறது. மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா.பொதுச்சபை 2012ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது.


உலக சிட்டுக்குருவிகள் தினம்

🐦 ஒவ்வொரு ஆண்டும் உலக சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

🐦 நவீன கட்டிட அமைப்பு, தேவைக்கு குறைவான தானியங்கள், விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்கப்படுதல், நிலம் மற்றும் நீர் மாசு காரணமாகவும், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகவே, சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக, அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


பிறந்த நாள் :-


ஹென்ரிக் இப்சன்

✍ நவீன நாடக இலக்கியத்தின் தந்தை ஹென்ரிக் இப்சன் 1828ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி தெற்கு நார்வேயின் ஸ்கியன் நகரில் பிறந்தார்.

✍ இவர் சிறுவயதில் இருந்தே ஏராளமான கவிதைகள், இறையியல் நூல்களைப் படித்தார். விரைவில் கவிதை எழுதத் தொடங்கினார். பின்பு கேட்டிலினா என்ற நாடகத்தை எழுதி வெளியிட்டார். அதை தொடர்ந்து பல நாடகங்களை எழுதினார். இவரது எ டால்ஸ் ஹவுஸ் நாடகம் அதிகமாக அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் ஒன்றாகப் புகழ்பெற்றது.

✍ ஏராளமான கவிதைகள் அடங்கிய தொகுப்பை 1871ஆம் ஆண்டு வெளியிட்டார். பல நாடகங்களை இயக்கி, தயாரிக்கவும் செய்தார். பிராண்ட் நாடகம் அதிக பாராட்டுகளைப் பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

✍ உளவியல் ரீதியான நாடகங்களை எழுதியதால் நாடகத் துறையின் ஃபிராய்ட் என வர்ணிக்கப்பட்டார். 1902, 1903, 1904ஆம் ஆண்டுகளில் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

✍ தலைசிறந்த நாடக ஆசிரியர்களில் ஒருவர், நாடக இயக்குநர், கவிஞர் என பன்முகத்திறன் கொண்ட இவர் 78வது வயதில் (1906) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


235 – மாக்சிமினசு திராக்சு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.

1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

1739 – நாதிர் ஷா தில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.

1760 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.

1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி “நூறு நாட்கள்” ஆட்சியை ஆரம்பித்தான்.

1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கொன்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1861 – மேற்கு அர்கெந்தீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.

1864 – இலங்கையின் பிரபலமான கொள்ளைக்காரன் உத்துவான்கந்தை சூர சார்டீல் என்பவன் கேகாலை, மாவனெல்லையில் கைது செய்யப்பட்டான். பின்னர் 1964 மே 7 இல் தூக்கிலிடப்பட்டான்.[1]

1890 – செருமனியின் பிரதமர் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் பேரரசர் இரண்டாம் வில்லியமால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

1913 – சீனத் தேசியக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுங் சியாவோ-சென் கொலை முயற்சியில் காயமடைந்தார். இவர் இரண்டாம் நாள் உயிரிழந்தார்.

1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது பொதுச் சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.

1922 – ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் லாங்லி சேவைக்கு விடப்பட்டது.

1933 – டேச்சு அரசியல் கைதிகள் முகாமை அமைப்பதற்கான கட்டளையை ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ் ஐன்றிச் இம்லர் விடுத்தார்.

1934 – சப்பானில் ஆக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்தது, 2,165 பேர் உயிரிழந்தனர்.

1942 – போலந்தில் நாட்சி செருமனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1942 – மேற்கு உக்ரேனில் ரொகார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் செருமனியப் படைகளால் கொல்லப்பட்டனர்.

1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.

1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.

1972 – வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் முதற்தடவையாக ஐரியக் குடியரசுப் படை கார்க் குண்டுத் தாக்குதலை நடத்தியது. ஏழு பேர் கொல்லப்பட்டனர், 148 பேர் காயமடைந்தனர்.

1987 – அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எயிட்சுக்கு எதிரான சிடோவிடின் என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது.

1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.

1990 – பெர்டினண்ட் மார்க்கோசின் மனைவி இமெல்டா மார்க்கோஸ், கையூட்டு, கையாடல், ஊழல் போன்ற குற்றங்களுக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

1993 – இங்கிலாந்து, வெரிங்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுத்தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1995 – டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஓம் சின்ரிக்கியோ என்ற மதக் கும்பல் நடத்திய நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 13 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.

2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

2006 – கிழக்கு சாடில் 150 சாட் இராணுவத்தினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

2012 – ஈராக்கின் 10 நகரங்களில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் 52 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.

2015 – வலய மறைப்பு, சம இரவு நாள், பெருமுழுநிலவு அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்தன.

இன்றைய தின பிறப்புகள்


கிமு 43 – ஆவிட், உரோமைப் புலவர் (இ. 17)

1615 – தாரா சிக்கோ, முகலாய இளவரசர் (இ. 1659)

1737 – முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (இ. 1809)

1811 – பிரான்சின் இரண்டாம் நெப்போலியன் (இ. 1832)

1828 – என்ரிக் இப்சன், நோர்வே கவிஞர், இயக்குநர் (இ. 1906)

1904 – பி. எப். ஸ்கின்னர், அமெரிக்க உளவியலாளர் (இ. 1990)

1906 – பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ, உருசிய-சோவியத் அறிவியளாளர், வானியலாளர் (இ. 1960)

1920 – பெலிக்சு யூரியேவிச் சீகல், சோவியத் வானியலாளர் (இ. 1988)

1921 – பி. சி. அலெக்சாண்டர், இந்திய அரசியல்வாதி (இ. 2011)

1925 – டேவிட் வாரன், ஆத்திரேலிய அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 2010)

1940 – புலவர் அரசு, தமிழக எழுத்தாளர்

1940 – சி. பத்மநாதன், இலங்கை வரலாற்றாளர், கல்வியாளர்

1942 – காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (இ. 1994)

1942 – முத்துலிங்கம், கவிஞர், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்

1944 – எர்வின் நேயெர், நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரி இயற்பியலாளர்

1945 – எர்லிங் பிராண்ட்நெஸ், நோர்வே அரசியல்வாதி

1957 – இசுப்பைக் லீ, அமெரிக்க நடிகர், இயக்குநர்

1965 – வில்லியம் தால்ரிம்பில், இசுக்கொட்டிய வரலாற்றாளர்

1966 – ஆல்கா யாக்னிக், இந்தியப் பாடகி

1980 – கணேஷ் வெங்கட்ராமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1986 – ரிச்சா கங்கோபாத்யாய், இந்தியத் திரைப்பட நடிகை

1987 – கங்கனா ரனாத், திரைப்பட நடிகை

1987 – அரிச்சரண், தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர்

இன்றைய தின இறப்புகள்


1351 – முகம்மது பின் துக்ளக், தில்லி சுல்தான் (பி. 1300)

1726 – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1642)

1858 – ராணி அவந்திபாய், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை

1873 – வில்லியம் பிரைடன், பிரித்தானியக் கிழக்கிந்திய இராணுவ அதிகாரி, மருத்துவர் (பி. 1811)

1925 – கர்சன் பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 35வது தலைமை ஆளுநர் (பி. 1859)

1943 – எயின்ரிச் ராபர்ட் சிம்மர், செருமனிய வரலாற்றாளர், இந்திய ஆய்வாளர் (பி. 1890)

1977 – சார்ல்ஸ் லிட்டில்டன், நியூசிலாந்தின் 9வது ஆளுநர் (பி. 1909)

2004 – யூலியானா, இடச்சு அரசி (பி. 1909)

2008 – சோபன் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1937)

2010 – கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேப்பாளத்தின் 30வது பிரதமர் (பி. 1924)

2013 – சில்லூர் இரகுமான், வங்காளதேசத்தின் 15வது அரசுத்தலைவர் (பி. 1929)

2014 – குஷ்வந்த் சிங், இந்திய எழுத்தாளர் (பி. 1915)

2015 – மால்கம் பிரேசர், ஆத்திரேலியாவின் 22வது பிரதமர் (பி. 1930)

2018 – ம. நடராசன், தமிழக அரசியல்வாதி, இதழாசிரியர்

இன்றைய தின சிறப்பு நாள்


நவுரூஸ் (பாரசீக, குர்திய, சொராட்டிய மக்கள்)

பன்னாட்டு சோதிட நாள்

உலகக் கதை படிக்கும் நாள்

விடுதலை நாள் (தூனிசியா, பிரான்சிடம் இருந்து 1956)

உலக சிட்டுக்குருவிகள் நாள்