ராணிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முத்துக்கடை பஸ் நிறுத்தம் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கலைமணி தலைமை தாங்கினார்.மாநில இணை செயலாளர் அமிர்தவள்ளி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், நெமிலி, அரக்கோணம் வட்டார நிர்வாகிகள், உள்பட அங்கன்வாடிகள் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.