ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட நாராயணபுரம் பகுதியில் தனி யாருக்கு சொந்தமான கடலை மிட்டாய் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.

இங்கு தயாரிக்கப் படும் கடலை மிட்டாய் மற்றும் தின்பண்டங்கள் பல மாநிலங்களுக்கு அனுப்பி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இப்பகுதியில் மின் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் ஜெனரேட்டர்கள் மூலம் கம்பெனி இயங்கியது. ஒரு கட்டத்தில் ஜெனரேட்டரும் பழுதானது. இதனால் ஆயில் டெம்பரேச்சர் அதிகமாகி தீப்பற்றி எரிந்தது.

இது குறித்து ஆற்காடு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை மேலும் பரவ விடாமல் கட்டுப்படுத்தி அணைத்தனர்.

இந்த திடீர் தீ விபத்தினால் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.