நெமிலி சிறுணமல்லி பகுதியில் கள்ளச் சந்தையில் அரசு மது பானம் விற்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்ஜீவுலு மற்றும் போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுணமல்லி பகுதியில் பைக்கில் அரசு மதுபானம் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. 

இதையடுத்து அங்கிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த பாண்டியன்(41), அம்சா(42) ஆகியோர் என தெரியவந்தது.

பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 மது பான பாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்யப்பட்டது.