ராணிப்பேட்டை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 2 சிறுமிகள் பலியாகினர்.
2 girls were killed when their car overturned in a roadside ditch near Ranipet


ராணிப்பேட்டை மாவட்டம், சென்னை அடுத்த வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம்(45). இவரது உறவினர் துக்க சம்பவத்திற்காக ஆந்திர மாநிலம் வஜ்ரகரூர் என்ற கிராமத்திற்கு தன் மகள்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 13 பேர் 2 காரில் சென்றுள்ளனர்.

துக்க நிகழ்வை முடித்துவிட்டு மீண்டும் சென்னை நோக்கி வந்த போது ராணிப்பேட்டை அடுத்த பெல் பைபாஸ் சாலையில் ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தபசு பாத்திமா(15), சுமையா பாத்திமா(17) ஆகிய இரண்டு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஓட்டுநர் சதீஷ் உட்பட ஐந்து பேர் சிறு காயங்களுடன் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியின் உடல்கள் உடற்கூராய்வுக்ககா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினரின் துக்க நிகழ்விற்காக சென்று திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு சிறுமிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை மற்றும் பரபரப்பையும் ஏற்பட்டுத்தியுள்ளது.