சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் மாநில அளவில் 8வது ஏர்கன் துப்பாக்கி சுடும்போட்டி நடைபெற்றது.
இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இருந்து 250 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில், குடியாத்தம் அடுத்த பக்கம்கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி 7ம் வகுப்பு மாணவன் கிருத்திகேஷ் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

இவரை பள்ளி நிர்வாகி மஞ்சுநாத், தலைமை ஆசிரியர் பரிமளா உள்ளிட்டோர் பாராட்டினர்.