👉 2003ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி விக்கிமீடியா (wikimedia) அமைப்பு உருவானது. 

👉 1990ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி யுரேக்கா (5261 Eureka) என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.


முக்கிய தினம் :-


சர்வதேச அகதிகள் தினம்

👉 மதக்கலவரம், இனக்கலவரம், உள்நாட்டுப்போர், இயற்கைப் பேரழிவுகள் போன்ற காரணங்களால் தங்கள் நாட்டில் வாழ்வதற்கு வழி இல்லாமல் வெளியேறுபவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் 2000ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 20ஆம் தேதி உலக அகதிகள் தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.


பிறந்த நாள் :-


விக்ரம் சேத்

👉 இந்திய எழுத்தாளர் விக்ரம் சேத் 1952ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

👉 இவரது முதல் கவிதைத் தொகுப்பை மேப்பிங்ஸ் (Mappings) என்ற பெயரில் வெளியிட்டார். இவர் 'ஃபிரம் ஹெவன் லேக்', 'தி கோல்டன் கேட்', 'எ சூட்டபிள் பாய்' உள்ளிட்ட நாவல்கள், 'பீஸ்ட்லி டேல்ஸ்', 'தி ஃப்ராக் அண்ட் தி நைட்டிங்கேல்' உள்ளிட்ட கவிதைகள், பயண நூல்கள் என பல துறைகளில் எழுதியுள்ளார்.

👉 தாமஸ் குக் பயண நூல் விருது, காமன்வெல்த் கவிதை விருது (ஆசியா), சாகித்ய அகாடமி (ஆங்கிலம்), ஐரிஷ் டைம்ஸ் இன்டர்நேஷனல் ஃபிக்ஷன் பரிசு, பத்மஸ்ரீ போன்ற ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

👉 கவிஞர், நாவல் ஆசிரியர், வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் எனப் பன்முகத்திறன் கொண்ட இவர் தனது 66வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

இன்றைய தின நிகழ்வுகள்


1248 – ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது.

1631 – அயர்லாந்தில் பால்ட்டிமோர் நகரம் அல்சீரியாவின் கடற்கொள்ளையாளர்களால் சூறையாடப்பட்டது.

1685 – மொன்மூத் இளவரசர் ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னைத் தானே அறிவித்தார்.

1756 – பிரித்தானியப் படைவீரர்கள் கல்கத்தாவின் வில்லியம் கோட்டைக்கு அருகில் நவாபுகளினால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

1819 – அமெரிக்காவின் சவன்னா என்ற கப்பல் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை அடைந்தது. அத்திலாந்திக்கைக் கடந்த முதலாவது நீராவிக் கப்பல் இதுவாகும்.

1837 – விக்டோரியா பிரித்தானியாவின் பேரரசி ஆனார்.

1840 – சாமுவெல் மோர்சு தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1858 – இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.

1862 – உருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வர்ஜீனியா 35வது அமெரிக்க மாநிலமாக இணைந்தது.

1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக முறைத் தொலைபேசி சேவையை கனடா, ஆமில்ட்டனில் ஆரம்பித்தார்.

1887 – சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் மும்பையில் திறக்கப்பட்டது.

1900 – எதுவார்த் தோல் என்பவர் தலைமையிலான 20-பேர் கொண்ட குழு வடமுனைக்கான ஆய்வுப் பயணத்தை உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இக்குழு திரும்பி வரவேயில்லை.

1921 – சென்னையில் பக்கிங்காம், கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள் நான்கு-மாதப் பணி நிறுத்தத்தை ஆரம்பித்தனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சை ஊடுருவியது, ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.

1942 – பெரும் இன அழிப்பு: கசிமியெர்சு பைச்சோவ்ஸ்கி மற்றும் மூவர் சுத்ஸ்டாப்பெல் காவலர்களாக உடையணிந்து அவுசுவித்சு வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றனர்.

1943 – அமெரிக்காவில் டிட்ராயிட் மாநிலத்தில் இனக் கலவரம் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் நீடித்த இக்கலவரத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர்.

1944 – சோதனை ஏவுகணை எம்.டபிள்யூ 18014 வி-2 176 கிமீ உயரத்தை அடைந்து வெளியுலகிற்குச் சென்ற முதலாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்ற சாதனை படைத்தது.

1948 – கூட்டுப்படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு செருமனியில் இடாய்ச்சு மார்க் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1956 – வெனிசுவேலாவைச் சேர்ந்த லீனியா 253 விமானம் நியூ செர்சி, அசுபரி பார்க் அருகே அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில் 74 பேர் உயிரிழந்தனர்.

1959 – அரிதான சூன் மாத வெப்ப மண்டலச் சூறாவளி கனடாவில் சென் லாரன்சு குடாவைத் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர்.

1960 – மாலி கூட்டமைப்பு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. இது பின்னர் மாலி, செனிகல் என இரண்டாகப் பிரிந்தது.

1973 – அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் இடதுசாரிகள் மீது குறிசுடுநர்கள் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

1990 – கல்முனைப் படுகொலைகள்: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் இலங்கைப் படைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990 – 5261 யுரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1990 – ஈரானின் வடக்கே 7.4 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 35,000–50,000 வரையானோர் உயிரிழந்தனர்.

1991 – செருமனியின் தலைநகரை பான் நகரில் இருந்து பெர்லினுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக செருமன் நாடாளுமன்றம் வாக்களித்தது.

1994 – ஈரானில் இமாம் ரேசா மதத்தலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர், 300 பேர் வரை காயமடைந்தனர்.

2003 – விக்கிமீடியா நிறுவனம் புளோரிடாவின் சென். பீட்டர்சுபர்க் நகரில் ஆரம்பமானது.[1]

இன்றைய தின பிறப்புகள்


1760 – ரிச்சர்டு வெல்லசுலி, பிரித்தானிய அரசியல்வாதி, குடியேற்றத் திட்ட நிர்வாகி (இ. 1842)

1861 – பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரிவேதியியலாளர் (இ. 1947)

1884 – மேரி ஆர். கால்வெர்ட், அமெரிக்க வானியலாளர் (இ. 1974)

1927 – கே. கே. பாலகிருஷ்ணன், கேரள அரசியல்வாதி (இ. 2000)

1939 – ரமாகாந்த் தேசாய், இந்தியத் துடுப்பாளர் (இ. 1998)

1941 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (இ. 2011)

1949 – கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் 8-வது அரசுத்தலைவர்

1952 – விக்ரம் சேத், இந்திய எழுத்தாளர், கவிஞர்

1954 – சுந்தரம் கரிவரதன், இந்தியத் தானுந்து விளையாட்டு வீரர் (இ. 1995)

1967 – நிக்கோல் கிட்மேன், அமெரிக்க-ஆத்திரேலிய நடிகை

1970 – கானா பாலா, தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

1971 – ஜோஷ் லுகாஸ், அமெரிக்க நடிகர்

1974 – லெனின் எம். சிவம், இலங்கை-கனடிய இயக்குநர், தயாரிப்பாளர்

1978 – பிராங்கு லம்பார்டு, ஆங்கிலேயக் கால்பந்து வீரர்

1984 – நீத்து சந்திரா, இந்திய நடிகை

இன்றைய தின இறப்புகள்


656 – உதுமான், அரேபிய கலிபா (பி. 577)

1617 – முதலாம் இராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1552)

1837 – நான்காம் வில்லியம், ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் (பி. 1765)

1966 – ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய இயற்பியலாளர், கணிதவியலாளர், மதகுரு (பி. 1894)

1971 – மகாகவி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (பி. 1927)

2005 – ஜாக் கில்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்., பொறியியலாளர் (பி. 1923)

2006 – சுரதா, தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர் (பி. 1921)

2015 – ஆர். பிச்சுமணி ஐயர், தமிழக வீணை இசைக்கலைஞர் (பி. 1920)

இன்றைய தின சிறப்பு நாள் 


உலக அகதி நாள்

மாவீரர் நாள் (எரித்திரியா)