நம்மில் பலரும் எது சிறந்த முதலீடு எனக் கேட்டால், 10ல் 5 பேருக்கும் அதிகமாக கூறுவது வங்கி பிக்ஸட் டெபாசிட் தான்.

இதில் சந்தை அபாயம் இல்லை. நிலையான கணிசமான வருவாய். எல்லாவற்றிற்கும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனம். ஆக மிக பாதுகாப்பான ஒரு முதலீட்டு எனலாம்.

இப்படி பல அம்சங்களும் சாதகமான உள்ள ஒரு திட்டத்தில், வங்கியில் வைப்பு நிதிக்கு கொடுக்கும் வட்டியை விட, இங்கு அதிகம் எனலாம். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டம் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்களின் முதலீட்டு திட்டம் பற்றி தான்.

இதனை கவனியுங்கள்

தமிழ்நாடு டிரான்ஸ்போர்ட் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (Tamilnadu transport Development Finance Corporation) நிறுவனம் வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். இது முழுக்க முழுக்க தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனமாகும். இது NBFC என்பதால் அரசின் 5 லட்சம் ரூபாய்க்கான இன்சூரன்ஸ் திட்டம் க்ளைம் செய்ய முடியாது என்பது கவனிக்கதக்க விஷயம். ஆக டெபாசிட் செய்யும் முன்னர் இதனையும் தெரிந்து கொண்டு டெபாசிட் செய்வது மிக நல்லது.

மாதாந்திர வருமானம் தரும் திட்டம்

இந்த நிறுவனம் தமிழக போக்குவரத்து துறைக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனம் இரண்டு வகையான டெபாசிட் திட்டங்களை வழங்கி வருகின்றது. 1. பீரியாடிக் இன்ட்ரஸ்ட் பேமெண்ட் ஸ்கீம் (periodic interest payment schemes), இந்த திட்டத்தில் வட்டி விகிதம் மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை என பெற்றுக் கொள்ளலாம்.

பணம் பெருக்கும் திட்டம் (Money mutiplyer Scheme- MMS)

பணம் பெருக்கும் திட்டம் (Money mutiplyer Scheme (MMS). இந்த திட்டத்தில் இடையில் வட்டி கிடைக்காது. இது முதிர்வின்போது மொத்தமாக கிடைக்கும். ஆக உங்களது முதலீட்டு தொகை இதன் மூலம் பெருகும். ஆக இடையில் எந்த வித தேவையில்லை. எதிர்காலத்தில் பெரும் தொகை வேண்டும் என நினைப்பவர்கள், அதற்கேற்ப இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம்.

மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம்

தமிழ்நாடு டிரான்ஸ்போர்ட் டெவலப்மெண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் மூத்த குடிமக்களுக்கு

12 மாதங்கள் - NA

24 மாதங்கள் - 7.50%

36 மாதங்கள் - 8.25%

60 மாதங்கள் - 8.50%

இந்த திட்டம் ஓய்வுகாலத்திற்கு பிறகு கிடைக்கும் பென்ஷன் தொகையை செலுத்த உதவிகரமானதாக இருக்கும். இது மாத மாதம் வருமானம் கிடைக்க வழிவகுக்கும்.

பொதுமக்களுக்கு என்ன விகிதம்

சாதரண மக்களுக்கு தமிழ்நாடு டிரான்ஸ்போர்ட் டெவலப்மெண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில்,

12 மாதங்கள் - NA

24 மாதங்கள் - 7.25%

36 மாதங்கள் - 7.75%

60 மாதங்கள் - 8.00%

இதில் வட்டி விகிதம் என்பது சற்று குறைவானதாக இருந்தாலும், முன்னணி வங்கிகளின் வட்டி விகிதத்துடன் ஒப்பிடும்போது அதிகம் என்பது நினைவில் கொள்ளதக்கது.

தமிழ்நாடு பவர் பைனான்ஸ் (Senior citizens)

இதே போன்று தமிழக அரசின் கீழ் உள்ள தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனமும், பிகஸ்ட் டெபாசிட் திட்டத்தினை வழங்கி வருகின்றது. ஈந்த நிறுவனத்தில் மூத்த குடிமக்களுக்கு

12 மாதங்கள் - 7.25%

24 மாதங்கள் - 7.50%

36 மாதங்கள் - 8.25%

60 மாதங்கள் - 8.50%

பவர் பைனான்ஸ்

தமிழ்நாடு பவர் பைனான்ஸ் (non senior citizens)

தமிழக அரசின் கீழ் உள்ள தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பொது குடிமக்களுக்கு,

12 மாதங்கள் - 7.00%

24 மாதங்கள் - 7.25%

36 மாதங்கள் - 7.75%

60 மாதங்கள் - 8.00%

ஆக இந்த இரு நிறுவனங்களிலும் உங்களுக்கு ஏற்ற ஒரு திட்டத்தினை தேர்தெடுத்து முதலீடு செய்யலாம். குறிப்பாக வங்கிகளோடு ஒப்பிடும்போது இதில் வட்டி விகிதம் என்பது அதிகமாக இருப்பதாலும், அரசின் ஆதரவில் செயல்படுவதால் நம்பகத் தன்மை கொண்டதாகவும் உள்ளது.