75வது சுதந்திர தின கொண்டாட்டம் முன்னிட்டு மத்திய அரசின் நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் நேற்று 'உடல் ஆரோக்கிய இந்தியா' என்ற மினி மராத்தான் நிகழ்ச்சி ஆற்காடு செய்யாறு சாலை டெல்லி கேட் அருகே நடந்தது.
கைத்தறி துறை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்து பங்கேற்றார். ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன், ஆற்காடு எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன் ஆகியோர் மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர்.
ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன், நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத்குமார், அலுவலர் ஆழிவாசன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட சேர்மன் பொன் சரவணன், அலுவலக கண்காணிப்பாளர் காயத்ரி, சங்கர், பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மராத்தான் ஆற்காடு பாலாறு பழைய மேம்பாலம் வழியாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.