ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த லட்சுமிபுரம் புதுத்தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் சத்யா. இவருக்கும் நெமிலி அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவர் பார்த்திபன் இறந்து விடவே தனது தாய் வீடான லட்சுமிபுரத்தில் சத்யா வசித்து வருகிறார்.

தான் வளர்த்து வந்த 2 கறவை மாடுகளை நேற்று மேய்ச்சலுக்காக வயல் வெளியில் கட்டியிருந்தார். மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 2 கறவை மாடுகளும் சம்பவ இடத்திலேயே பலியாகின.