அரக்கோணம் கணேஷ் நகர் 14வது தெருவைச் சேர்ந்தவர் சத்யா(23). அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அவரது தந்தை சீனிவாசன் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.