குறள் : 548

எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

மு.வ உரை :

எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன் தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.

கலைஞர் உரை :

ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை :

நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.

Kural 548

Enpadhaththaan Oraa Muraiseyyaa Mannavan
Thanpadhaththaan Thaane Ketum

Explanation :

The king who gives not facile audience (to those who approach him) and who does not examine and pass judgment (on their complaints) will perish in disgrace.

இன்றைய பஞ்சாங்கம்

23-10-2021, ஐப்பசி 06, சனிக்கிழமை, திரிதியை திதி பின்இரவு 03.02 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 09.53 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் இரவு 09.53 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கிருத்திகை. கௌரி விரதம். முருக வழிபாடு நல்லது. கரிநாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் - 


காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. 


இன்றைய ராசிப்பலன் - 23.10.2021

மேஷம்

இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வாயிலாக செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு சிறிது கரையும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்திருந்த கடன் உதவி கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள், எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். குடும்ப பிரச்சினைகள் உங்கள் மன நிம்மதியை குறைக்கும். எதிர்பார்த்த பணவரவுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் ஒரு சில அனுகூலங்கள் கிடைக்கப் பெறும்.

கடகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைப்பெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

கன்னி

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக இருப்பீர்கள். எளிதில் முடியக்கூடிய செயல்கள் கூட தாமதமாக முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகள் தடையின்றி வசூலாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு

இன்று குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். கடன் பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.

மகரம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேற கடன் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

கும்பம்

இன்று வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகாமல் தடைபடும். ஆரோக்கிய பாதிப்புகளால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,