அலட்சியம் செய்யாமல் 3வது அலையை தடுக்க கொரோனா தடுப்பூசியை அனைவரும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என ராணிப்பேட்டை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வாலாஜாவில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

மேற்கத்திய நாடுகளில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் இருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாகமுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டு 2வது தவணை ஊசியை போட்டுக்கொள்ளாமல்  பலர் காலம் தாழ்த்தி வருகின்றனர். எவ்வளவு விழிப்புணர்வு செய்தும் பல நேரங்களில் பலனில்லாமல் போவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

அரசு பல்வேறு முயற்சிகள் செய்து குடியிருப்புகளின் அருகே சிறப்பு முகாம்களை நடத்தி தடுப்பூசி போடுகிறது. ஆனால் அதையும் பலர் பொருட்படுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி மீது பலருக்கு ஆர்வம் இல்லாதது நினைக்கும்போது வேதனையை ஏற்படுத்துகிறது. இனி, 3வது அலை வராமல் தடுக்கவேண்டும் என்றால், அலட்சியம் காட்டாமல் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.