சிப்காட்டில் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிக்காமல் வெளியேற்றப் படுகிறதா? என, சப் கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார். உடன் டிஎஸ்பி பிரபு, திமுக மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத்காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், வாலாஜா பஞ்., யூனியன் தலைவர் சேஷா வெங்கட் ஆகியோர்.

ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அந்த நேரத்தில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே மழைநீருடன் கலக்க விட்டதாக தகவல் பரவியது.
இதையடுத்து நவ்லாக் புளியங்கண்ணை சேர்ந்த வர்கள் தொழிற்சாலை அமைந்துள்ள எம்பிடி சாலை முன்பு கூடினர். மேலும் அங்கு சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு அவர்களை சமாதானம் செய்தார். மேலும் அவர்கள் சுட்டிக் காட்டிய கால் வாயிலிருந்து தண்ணீர் மாதிரிகளை எடுத்தனர்.
அதை டெஸ்ட்டுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப் பதாகவும் கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந் நிலையில் நேற்று காலை சப்கலெக்டர் பூங்கொடி ,டிஎஸ்பி பிரபு, ஆகியோர் புகார் கூறப்பட்ட கழிவுநீர் கால்வாயில் இருந்து மீண்டும் மாதிரிகள் எடுத்தனர்.
அப்போது திமுக மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், வாலாஜா பஞ்., யூனியன் தலைவர் சேஷா வெங்கட், புளியங்கண் பகுதி முக்கிய பிரமுகர்களும் அங்கு திரண்டனர்.

மேலும் நடந்தது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதுகுறித்து சப் கலெக் டர்பூங்கொடி கூறும்போது, நேற்றிரவு (நேற்று முன்தினம்) டிஎஸ்பி., எடுத்த சாம்பிள்கள் மற்றும் இன்று (நேற்று) எடுத்த சாம்பிள்கள் அனைத்தும் டெஸ்ட்டுக்கு அனுப்பப்படும். ரிசல்ட் வந்த பிறகுதான் உண்மை நிலவரம் தெரியும். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.