கரோனா நோய் தொற்றால் ரயில் போக்குவரத்து ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. சில மாதங்களாக சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.

இதனால் அவசரத்துக்கு வெளியூர் செல்லும் பயணிகள் ரயிலில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. ஏனெனில் டிக்கெட் முன் பதிவு செய்யாமல் பயணிக்க முடிவதில்லை. இதனால் ரயில் இயக்கியும், பயணம் செய்ய முடியவில்லையே என்று பயணிகள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில் நவ.1ம் தேதி முதல் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வரை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண் 06089/06090) 6 பெட்டிகள் மட்டுமே முன் பதிவில்லாத பெட்டிகளாக இணைத்து இயக்கப்படுகிறது.

17 பெட்டிகள் முன்பதிவு பெட்டிகள். மொத்தம் 12 ரயில்களில் முன்பதி வில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு நவ.1ம் தேதி முதல் இயக்கப்பட்டாலும் பெரும்பாலான ரயில்கள் கேரள மாநிலம் வழியாக செல்லும் ரயில்கள் என்பது குறிப்பிடத்தக்கது.