அரக்கோணம் தாலு காவில் நேற்று காலை 6 மணி வரை 51.4 மி.மீ., நெமிலி தாலுகாவில் 33 மி.மீ மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை யால் கடந்த வாரம் தொடர் கனமழை பெய்த நிலை யில் நேற்று முன்தினமும் பலத்த மழை கொட்டியது.

இதில் அரக்கோணம் அடுத்த சம்பத்ராயன் பேட்டை புதுத்தெருவை சேர்ந்த மார்கபந்து (55), என்பவருக்கு சொந்தமான 50 ஆடுகள் பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந் தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழைக்கு ஆட்டுபட்டி அருகில் இருந்த சுவர் இடிந்து கீழே விழுந்ததில் ஒரு குட்டி உட்பட 7ஆடு கள் இறந்தன.

தகவலறிந்து நெமிலி யூனியன் சேர்மன் வடி வேலு, விஏஓ சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் அங்கு சென்று ஆட்டின் உரிமையாளர் மார்கபந்துவுக்கு ஆறுதல் கூறி அரசின் நிவாரண உதவியை விரை வில் பெற்றுத்தர நடவ டிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.