சக்கரமல்லூர் கால்வாயில் இருந்து சடலம் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் தனியார் பள்ளி அருகே உள்ள பாலாற்றிலிருந்து சக்கரமல்லூர் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்துள்ளது.

இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கால்வாயிலிருந்து 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கயிறு கட்டி மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் சடலமாக இருந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.