சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பேசுகையில், 'சென்னை மாநகர மக்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ₹1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலைகளை புதுப்பித்திருக்கிறோம், அடையாறு, கூவம் ஆறு சீரமைத்திருக்கிறோம். மழை காலங்களில் வடிகால் வசதி செய்து எங்கும் தண்ணீர் தேங்காமல் வெளியேற்றப்பட்டு இருக்கிறது. 

அதிமுக அரசு வடிகால் வசதியை சிறப்பாக செய்திருக்கிறது. சென்னை மாநகரத்தில் மட்டும் மழைநீர் கால்வாய் 954 கிலோ மீட்டர் நீள சாலைகளுக்கு கால்வாய்கள் அமைத்து, தொடர் மழை மற்றும் புயல் வந்தாலும் எந்த வீதியிலும் தண்ணீர் தேங்காமல் வெளியேற்றக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி தந்த அரசு என்று கூறினார். 

ஆனால், தற்போது ஒரு நாள் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியது எப்படி என்பதற்கு எடப்பாடி தான் விளக்கம் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.