Feeding children rice by showing them the moon is not a sport .. it is science ..
குழந்தை கருவில் இருக்கும்போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது. குழந்தை பிறந்து தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்த பின்புதான் உணவு குழலின் விட்டம் விரிய தொடங்குகிறது.
இது முழுமையடைய ஐந்து வருடம் ஆகிறது.
நிலவை காட்டி சோறு ஊட்டும் போது, குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது தொண்டை மற்றும் உணவுக்குழல் விரிவடைகிறது. அப்போது உணவு இலகுவாக இரைப்பையை நோக்கி இறங்குகிறது.
மேலும் தொண்டைக் குழலில் கீழ் நோக்கி இறங்கும் அலைவு இயக்கங்கள் மற்றும் செரிமான ஊக்கிகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கின்றன. இப்பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உணவு செரிமான மண்டலம் ஆரோக்கியம் பெறுகிறது. மேலும் நிலாவை காட்டி சோறு ஊட்டும்போது குழந்தைகள் உணவில் ஆர்வம் செலுத்துகிறார்கள்..