வேலுார்:கனமழையால், பாலாற்றில் பைக்குடன் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைக்கும் துறையினர் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி முதல் ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் வரை பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரம் பாலாற்று தரைப்பாலம் இன்று மீண்டும் மூழ்கியது. பணத்திற்கு ஆசைபட்ட சில ஆட்டோ டிரைவர்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டு தரைப்பாலத்தை கடந்து சென்று வந்த வண்ணம் இருந்தனர்.இந்நிலையில், மதியம் 3:00 மணிக்கு மேல் தரைப்பாலத்தில் நீர் வரத்து அதிகரித்தது. அப்போது பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் தரைப்பாலத்தை கடந்து செல்ல முன்றார். அங்கிருந்தவர்கள் தடுத்தும் கேட்காமல் தரைபாலத்தில் சென்ற போது வெள்ளத்தில் சிக்கி பைக்குடன் விழுந்து பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.தீயணைக்கும் துறையினர் பாலாற்றில் கயிறு கட்டிக் கொண்டு இறங்கி இளைஞரை தேடி வருகின்றனர்.