16 வீடுகள் சேதம்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும், என்று சென்னை வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்தது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது. ஆற்றங்கரைகள் மற்றும் ஏரி, குளங்களுக்கு அருகே வசித்து வந்த பொது மக்கள் பாதுகாப்பு முன்னேற்பாடாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் முகாம்களில் தங்கவைக் கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை பொழிவு காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியுள்ளது. ஏரிகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழையின் காரணமாக ஆற்காடு தாலுகாவில் 3 ஓட்டு வீடுகளும், ஒரு குடிசை வீடு மற்றும் 1 பசுமாடு இறந்தது. நெமிலி தாலுகாவில் 2 குடிசை வீடுகள். 3 ஓட்டு வீடுகளும், வாலாஜா தாலுகாவில் 1 குடிசை வீடும், 2 ஓட்டு வீடுகளும், கலவை தாலுகாவில் 2 குடிசை வீடுகளும், அரக்கோணம் தாலுகாவில் 1 குடிசை வீடும். சோளிங்கர் தாலுகாவில் ஒரு ஓட்டுவீடும் சேதமடைந்தது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக


வாலாஜா தாலுகாவில் 38.3 மி.மீ மழை பதிவானது. 


ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): 


  • ஆற்காடு-3.2, 
  • காவேரிப்பாக்கம்- 5, 
  • அம்மூர்- 17 
  • சோளிங்கர்- 4. 
  • கலவை- 36.2. 

  • மொத்த மழை அளவு: 103.7மி.மீ, 

  • சராசரி மழை அளவு:14.8 மி.மீ.