In 369 lakes in Ranipettai district 191 lakes were completely filled
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 191 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி முழுமையாக நிரம்பியுள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி முதல் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்குள்ள கலவகுண்டா அணை முழு மையாக நிரம்பியது.
மேலும் 15ஆயிரம் கன அடி உபரிநீரானது தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைநீரானது நீர்வரத்து கால்வாய்கள் மூலமாக ஏரிகளில் நிரப்பப்பட்டு வருகிறது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளுக்கு பாலாற்று வெள்ளம் திருப்பிவிடப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், ஏரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கலங்கல் வழியாக உபரிநீரானது வெளி யேற்றப்பட்டு மற்ற ஏரிகளுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 369 ஏரிகளில் 191 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. 32 ஏரிகள் 75 சதவீதம் நிரம் பியுள்ளது. 38 ஏரிகள் 50 முதல் 75 சதவீதம் வரை நிரம்பியுள்ளது. 72 ஏரிகள் 25 முதல் 50 சதவீதம் வரை நிரம்பி வருகிறது. 36 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறை வாக நிரம்பி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிரம்பாமல் உள்ள ஏரிகளுக்கு மழைநீர் திருப்பிவிடப்பட்டு முழுமையாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.