Karthika Deepam tragedy kills grandmother
ஆற்காடு அடுத்த ஆயிலம்புதூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னகுழந்தை (85), இவரது மனைவி அங்கம்மாள் (80), இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் (19.11.2021) கார்த்திகை தீபம் என்பதால் அங்கம்மாள் வீட்டில் விளக்குகளை ஏற்றி உள்ளார்.
சிறிது நேரம் கழித்து விளக்கு எரிவதை கவனிக் காமல் அவ்வழியாக சென்றபோது அங்கம்மாவின் புடவையில் தீப்பற்றி உடல் முழுவதும் தீ பரவி உள்ளது. இவரது அலறல் சத்தம் கேட்ட கணவர் சின்னகுழந்தை தீயை அணைக்க முயன்று கூச்சலிட்டுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அங்கம்மாளை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அங்கம்மாள் பரிதாபமாக இறந்தார். அங்கம்மாளின் மகன் சுப்பிரமணி ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் பசலை ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.