Near Arakkonam Train collision kills 23 goats


அரக்கோணம் அருகே ரயில் மோதி 23 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று காலை 11.30 மணியளவில் பின்னாவரம் தண்டவாளம் அருகே 60க்கும் மேற்பட்ட தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் இன்ஜினில் அங்கு மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் சிக்கியது. அதில் சுமார் 23 ஆடுகள் அதே இடத்தில் இறந்தன.

இதைக்கண்ட மணி அதிர்ச்சியடைந்து திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து மணியின் குடும் பத்தினர் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினர். இதுகுறித்து அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விஏஓ சிவராஜ் விசாரித்து வருகிறார்.