குறள் : 558
இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
மு.வ உரை :
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால் பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.
கலைஞர் உரை :
வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.
சாலமன் பாப்பையா உரை :
தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.
Kural 558
Inmaiyin Innaadhu Utaimai Muraiseyyaa
Mannavan Korkeezhp Patin
Explanation :
Property gives more sorrow than poverty to those who live under the sceptre of a king without justice
இன்றைய பஞ்சாங்கம்
02-11-2021, ஐப்பசி 16, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பகல் 11.31 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. உத்திரம் நட்சத்திரம் பகல் 11.44 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 11.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம்
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 02.10.2021
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு கரையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் லாபம் கிட்டும்.
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.
சிம்மம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவுகேற்ற செலவுகள் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். எதிர்பாராத உதவி கிட்டும்.
கன்னி
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். வீண் செலவுகளை தவிர்த்து சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிட்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு மனஅமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். சகோதர சகோதரிகளால் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும்.
மகரம்
இன்று பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். நெருக்கடிகளை சமாளிக்க நிதானமாக செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
மீனம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,