சோளிங்கரில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி டிப்பர் லாரி நேற்று சென்றது. தக்கான் குளம் அருருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்டு டிரைவர் லாரியை சாலையின் ஓரமாக ஓட்டிச்சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் சாய்ந்தது. 

அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து கிரேன் இயந்திரம் வரவழைக் கப்பட்டு லாரியை மீட்கும் பணி மேற்கொள் எப்பட்டது. 

இதனால் சோளிங்கர்- அரக்கோணம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக் குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.