🌸 1905 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ஆற்றலுக்கும் பொருண்மைக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.


முக்கிய தினம் :-


உலக தத்துவ தினம்

🌷 ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை உலக தத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.

🌷 மனித சிந்தனை வளர்ச்சியில் தத்துவங்கள் வகிக்கும் நீடித்த பங்கினை நினைவு கூறவும் 'நீதி' நேர்மை மற்றும் சுதந்திரத்தை தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தத்துவத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்துப் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கத்தில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


உலக தொலைக்காட்சி தினம்

📺 உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துச் சொல்லப்படுகிறது.

📺 1996ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக தொலைக்காட்சி கருத்தரங்கின் பரிந்துரையின்படி ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அறிவித்தது. அதன்படி 1997ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி முதன் முறையாக உலக தொலைக்காட்சி தினம் கொண்டாடப்பட்டது.


உலக மீனவர்கள் தினம்

🌺 கடலில் மீனவர்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் 40 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997ஆம் ஆண்டு டெல்லியில் கூடி விவாதித்தனர்.

🌺 அப்போது உலகளவில் இணைந்து மீனவர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராடுவதற்காக மீன்பிடி தொழிலாளர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர்.

🌺 இதன்மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சனைகள், பாரம்பரிய மீனவர்களின் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் மாசடைந்து மீன்வளம் குன்றி மீன்பிடித் தொழில் அழிவுப் பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நவம்பர் 21ஆம் தேதி உலக மீனவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.


உலக ஹலோ தினம்

🌹 ஒவ்வொரு ஆண்டும் உலக ஹலோ தினம் நவம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1973ஆம் ஆண்டு எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கிடையே நடைபெற்ற போரினை முடிவுக்கு கொண்டு வந்தது. இத்தினத்தில் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, நவம்பர் 21ஆம் தேதி இரு நாடுகளும் ஹலோ சொல்லிக்கொண்டனர். ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.


நினைவு நாள் :-


சர்.சி.வி.இராமன்

🌟 உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதை சர் சந்திரசேகர வெங்கட ராமன் 1888ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைகாவல் என்னும் ஊரில் பிறந்தார்.

🌟 அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் அறிவியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இல்லாததால், கொல்கத்தாவில் நிதித்துறை துணை தலைமை கணக்கராக பணியில் சேர்ந்தார். மகேந்திரலால் சர்க்கார் நிறுவிய இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தில் பகுதி நேரமாக வேலை செய்தார். இசைக்கருவிகளின் அதிர்வுகள், ஒளிச் சிதறல் பற்றி ஆய்வுகளை செய்தார்.

🌟 ஒளி ஒரு பொருளில் ஊடுருவிச் செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர்.

🌟 இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு 1930ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமே படித்த ஒருவர் நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறையாகும்.

🌟 இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டு இவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு அகில 'உலக லெனின் பரிசு' அளிக்கப்பட்டது. பெரும் புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி.வி.இராமன் தன்னுடைய 82வது வயதில் 1970ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


ஐசக் பாஷவிஸ் சிங்கர்

✍ இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஐசக் பாஷவிஸ் சிங்கர் 1901ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி போலந்து நாட்டின் லியான்சின் கிராமத்தில் பிறந்தார். 

✍ இவர் நியூயார்க்கில் 'தி பார்வர்டு' என்ற இட்டிஷ் மொழி பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்தார். தனிமை உட்பட பல்வேறு காரணங்களால் மனச் சோர்வுக்கு ஆளானார். அப்போதுதான்'லாஸ்ட் இன் அமெரிக்கா' என்ற நாவலுக்கான கரு உதயமானது.

✍ இவர் எழுதிய 'தி ஸ்லேவ்' நாவல் 1962-ல் வெளிவந்தது. குழந்தைகளுக்காக இவர் எழுதிய நூல்கள் மிகவும் பிரசித்தம். 18 நாவல்கள், குழந்தைகளுக்கான 14 புத்தகங்கள், ஏராளமான நினைவுச் சித்திரங்கள், கட்டுரைகள், சுயசரிதைகள் எழுதியுள்ளார்.

✍ இட்டிஷ் இலக்கிய இயக்கத்தின் முக்கிய நபராகத் திகழ்ந்தார். அந்த மொழியில்தான் நூல்களை எழுதியும், வெளியிட்டும் வந்தார். 1978-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். அமெரிக்க தேசிய புத்தக விருதையும் வென்றார்.

✍ சொந்த வாழ்வில் துயரங்கள், விரக்தி, வறுமையோடு போராடினாலும் படைப்புத் திறனால் உலகப்புகழ் பெற்று வெற்றிகரமான எழுத்தாளராக உயர்ந்த ஐசக் பாஷவிஸ் சிங்கர் 1991ஆம் ஆண்டு மறைந்தார்.