ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான பைக்கா வில்வித்தை போட்டியில் வேலூர் விஐடி மாணவி நித்திகா தங்கப்பதக்கம் வென்றார்.
Vellore VIT student wins gold at national level archery competition
ராஜஸ்தான் மாநிலத்தில் ஐந்தாவது 'பஞ்சாயத் யுவகிரிடா கேல்அபியான் என்ற தேசிய அளவிலான பைக்கா விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் விஐடி முதலாம் வணிகவியல் துறை மாணவி நித்திகா வில்வித்தை போட்டியில் பங்கேற்றார். இந்த போட்யில் நித்திகா தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும் அவர்கள் விளையாட்டில் சாதனை புரிய வேண்டும். என்ற நோக்கத்திலும் விஐடியில் விளையாட்டு ஒதுக் கீடு பிரிவில் மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஐடியில் பயின்று வரும் நித்திகா தற்போது தங்கம் வென்றுள்ளார்.
தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி நித்திகாவை விஐடி வேந்தர் ஜி.விசுவ நாதன். துணைத்தலைவர் ஜி.வி. செல்வம், துணைவேந்தர் ராம் பாபு கோடாளி, இணை துணை வேந்தர் எஸ். நாராயணன், பதிவாளர் சத்யநாராயணன், உடற் கல்வி இயக்குனர் தியாக சந்தன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.