சோளிங்கர் அடுத்த பாராஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் முரளி(34), இவர் நேற்று முன்தினம் இரவு பாராஞ்சியில் இருந்து கூடலூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அங்குள்ள காலனி அருகே வந்த போது கூடலூரில் இருந்து பாராஞ்சி நோக்கி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தூக்கி வீசப்பட்ட முரளி படுகாயம் டைந்தார். அருகில் உள்ளோர் அவரை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து கொண்ட பாளையம் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்.