போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்த அசோக்குமார். அடுத்தபடம்: நகை மதிப்பீட்டாளர் சுரேஷ்.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஜீவானந்தம் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக ஆற்காடு தேவி நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 45) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். 

இவரது நண்பர் ஆற்காடு அமீன் பிரான் தெருவைச் சேர்ந்த அசோக்குமார் (35). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நகைகளை சுரேஷ் வேலை செய்யும் வங்கியில் அடகுவைத்து பணம் பெற்றுள்ளார்.

 
இதில் சந்தேகம் அடைந்த வங்கி கிளை மேலாளர் கோபி என்பவர் அசோக் குமார் அடகு வைத்த நகைகளை சோதனை செய்துள்ளார். அதில் அவர் வைத்த அனைத்து நகைகளும் கவரிங் என தெரியவந்தது. 

இதுகுறித்து வங்கிக் கிளை மேலாளர் கோபி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.