திருநெல்வேலியில் தனியார் பள்ளி சுவர் இடிந்து மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். பல மாணவர்கள் காயமடைந் தனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆபத்து விளைவிக்கும் பழு தடைந்த கட்டடங்களை கணக் கெடுத்து இடிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. அதன்படி மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பழுதடைந்து இடிக்கப்பட்ட மற்றும் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கலெக்டருக்கு அனுப்பியுள்ளார். மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி கட்டடங்களில் 127 கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அதில் 5 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளது.

மீதி உள்ள கட்டடங்களில் 81 ஆய்வு நிலையிலும் இடிப்பதற்கு தயாராக 40 கட்டடங்களும் உள்ளன. அதே போல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள கட்டடங்களில் 169 கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும். அதில் 27 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மீதி உள்ளவற்றில் 78 கட்டடங்கள் ஆய்வு நிலையில் உள்ளது. 64 கட்டடங்கள் இடிக்க தயார் நிலையில் உள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.