இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வங்கி விடுமுறைப் பட்டியலின்படி, ஜனவரி 2022 இல், நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் வெவ்வேறு மாநிலங்களில் மொத்தம் 16 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் 12 நாள்கள் விடுமுறை.

நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் வழக்கம் போல் இயங்காது.

வாராந்திர விடுமுறையைத் தவிர, வேறு பல விடுமுறைகள் காரணமாக ஜனவரி மாதத்தில் பல்வேறு மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். இருப்பினும், வங்கி விடுமுறை நாட்களில் ஆன்லைன் வங்கி சேவைகள் செயல்படும்.

நாளைத் தொடங்கும் புத்தாண்டின் முதல் மாதத்தில் வங்கிகள் என்றெல்லாம் இயங்காது (Bank Holidays) என்பதை தெரிந்துக் கொண்டால், திட்டமிடுவதற்கு சுலபமாக இருக்கும்.

ஜனவரி வங்கி விடுமுறை நாட்கள் 

ஜனவரி 1 : ஆங்கிலப் புத்தாண்டு (நாடு முழுவதும் விடுமுறை)

ஜனவரி 2 : ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 4: லோசூங் (சிக்கிம்)

ஜனவரி 8: இரண்டாவது சனிக்கிழமை

ஜனவரி 9 : ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 11: மிஷனரி தினம் (மிஜொரம்)

ஜனவரி 12: சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் (கொல்கத்தா)

ஜனவரி 14: மகர சங்கராந்தி/பொங்கல் (பல மாநிலங்கள்)

ஜனவரி 15: உத்தராயண புண்யகால மகர சங்கராந்தி விழா/மகே சங்கராந்தி/சங்கராந்தி/பொங்கல்/திருவள்ளுவர் தினம் (புதுச்சேரி, ஆந்திரா, தமிழ்நாடு)

ஜனவரி 16 : ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 18: தைப்பூசம் (சென்னை)

ஜனவரி 22: நான்காவது சனிக்கிழமை

ஜனவரி 23 : ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 26: குடியரசு தினம் (நாடு முழுவதும்)

ஜனவரி 30 : ஞாயிற்றுக்கிழமை

குறிப்பு: ஜனவரி 2022 இல், RBIஆல் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 9 விடுமுறைகள் (Bank Holidays) திட்டமிடப்பட்டுள்ளன. சனி மற்றும் ஞாயிறு கூட்டினால் மொத்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 16 ஆகிவிடும். 

தமிழகத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும்.