நெமிலி அடுத்த சிறுணமல்லி மேல்காலனி ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் அருண்ராஜ். இவரது உறவினர் மகளின் திருமணம் சம்பத் ராயன்பேட்டையில் உள்ள மண்டபத்தில் நடந்தது.

திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கரியாகுடல் காலனியை சேர்ந்த இளைஞர்களும் வந்திருந்தனர். மண்டபத்தில் இரவு நடன நிகழ்ச்சி நடந்தது.

4 வாலிபர்கள் கைது


அப்போது கரியாகுடல் காலனியை சேர்ந்த இளைஞர்கள் நடனமாடும்போது பெண்களிடம் அசிங்கமான முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது.

இதனை அருண்ராஜ் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கரியாகுடல் காலனியை சேர்ந்த ஜெகன் (28), சிபி ராஜ் (24), திருமலை (எ) அஜய் (20), தியாகு (20) ஆகியோர் மண்டபத்தில்

இருந்த சேர்களை துாக்கி வீச் சேதப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்த சுனிலுக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து நெமிலி போலீசில் அருண்ராஜ் புகார் கொடுத்தார். சப்இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு வழக்குப்பதிவு செய்து ஜெகன், சிபிராஜ், திருமலை, தியாகு ஆகிய 4 பேரை கைது செய்தார்.