ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் வேளாளர் தெருவை சேர்ந் தவர் அசோக் (40), இவர் பஸ் ஸ்டாண்டில் துளசி மாலை, நெய், பன்னீர், தேங்காய், பழம் உள்ளிட்ட ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை கடையை பூட்டி விட்டு சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்று உள்ளார். இந்நிலையில் இரவு 10 மணியளவில் கடையில் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்தது. அப்போது அக்கம் பக்கத் தினர்தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் ஐயப்ப சுவாமிக்கு அணியும் துளசி மணிமாலைகள், நெய் டப்பாக்கள், உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

சம்பவ இடத்திற்கு வந்த விஏஓ டோமேசன் வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினார்.