சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பெரியமலையின் கீழ் ரோப்கார் அமைவிடத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 11 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிக்கான கட்டடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்காக தனியார் நிறுவனத்தினர் அளவு எடுக்கும் பணி நடந்தது.

அளவு எடுக்கும் பணி மற்றும் வரைபடத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் மாவட்ட அவைத்தலைவர் அசோகன், சோளிங்கர் நகர செயலாளர் கோபி, வக்கீல் அருண்ஆதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.