ராணிப்பேட்டை முத்துக்கடையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசு தொகையினை வழங்கிட வேண்டும் மற்றும் சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு காய்கறிகளை மாலையாக அணிந்து கோ‌ஷங்களை எழுப்பி அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை:


ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.


ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால், முன்னாள் எம்.எல்.ஏ சோளிங்கர் சம்பத், முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட துணை செயலாளர் சம்மந்தம், மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட மகளிரணி செயலாளர் ராதிகா, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், ஜெ பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோ‌ஷம் வரவேற்றார். இந்த ஆர்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை குறைத்திட வேண்டும்.

காய்கறி விலைவாசி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு கண்டித்தும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்.

பொங்கல் பரிசு தொகையினை வழங்கிட வேண்டும் மற்றும் சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு காய்கறிகளை மாலையாக அணிந்து கோ‌ஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சினிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முனுசாமி, நகர செயலாளர் மோகன், பேரூர் செயலாளர்கள் அம்மூர் தினகரன், காவேரிப்பாக்கம் மஞ்சுநாதன், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பெல் கார்த்திகேயன், ராஜா, ஏ.எல்.விஜயன் உள்பட மாவட்டத்தில் உள்ள நகர ஒன்றிய பேரூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.