பிட்காயினுக்கு ஆதரவாக பரபர போஸ்ட்.. ஹேக் செய்யப்பட்ட பிரதமர் மோடி ட்விட்டர் கணக்கு.. மீட்கப்பட்டது

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி ட்விட்டர் தளத்தில் ஆக்டிவாக இருக்க கூடிய நபர். இவருக்கு இரண்டு ட்விட்டர் கணக்குகள் உள்ளன.

ஒன்று இந்திய பிரதமரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் ஆகும். அது @PMOIndia பக்கம் ஆகும். இன்னொன்று பிரதமர் மோடியின் தனிப்பட்ட கணக்கான @narendramodi பக்கம் ஆகும்.



ஹேக்

இந்த நிலையில்தான் நேற்று நள்ளிரவில் சில நிமிடங்கள் @narendramodi கணக்கு ஹேக் செய்யப்பட்டது. மர்ம ஹேக்கர்கள் மூலம் இந்த கணக்கு சில நிமிடங்கள் ஹேக் செய்யப்பட்டது. பிரதமர் அலுவலக நிர்வாகிகள் இதை உடனே கண்டுபிடித்துள்ளனர்.



புகார்

ட்விட்டர் நிறுவனத்திற்கு இது தொடர்பாக அவர்கள் உடனடியாக புகாரும் அளித்தனர். இதையடுத்து ஹேக் செய்யப்பட்ட பிரதமர் மோடியின் கணக்கு உடனடியாக மீட்கப்பட்டது. ஹேக் செய்தவர்கள் பிரதமர் மோடியின் கணக்கில் பிட்காயினுக்கு ஆதரவாக போஸ்ட் செய்துள்ளனர்.



பிட்காயின்

இந்தியாவில் பிட்காயினை அதிகாரபூர்வ நாணயமாக அறிவித்துவிட்டதாக போஸ்ட்கள் செய்யப்பட்டு இருந்தனர். ஹேக் செய்யப்பட்ட பின் போஸ்ட் செய்யப்பட்ட ட்விட்கள் உடனடியாக நீக்கப்பட்டன. இதையடுத்து பிரதமர் அலுவலகம் கொடுத்த விளக்கத்தில், பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு சில நிமிடங்களுக்கு ஹேக் செய்யப்பட்டது.



மீட்பு

இது உடனே மீட்கப்பட்டுவிட்டது. ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் போஸ்ட் செய்யப்பட்ட ட்விட்களை பற்றி மக்கள் குழப்பம் அடைய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாடு கொண்டு வருவதற்கு எதிராக பல்வேறு கிரிப்டோகரன்சி ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில்தான் இந்த ஹேக்கிங் நிகழ்ந்துள்ளது. இந்த ஹேக்கிங்கை மேற்கொண்டவர்கள் யார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

PM Modi Twitter account hacked got briefly few minutes, recovered back after a complaint.