சோளிங்கர் யூனியன் அலுவலகத்தில் மாநிலல ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தீனதயாள உபாத்யாய ஊரக கவு சல்யா திட்டத்தின் கீழ் வட்டார் அளவிலான தனி யார்துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி முகாம் இன்று நடக்கிறது.
காலை 10 மணி முதல் 3 மணி வரை நடக்கும் இம்முகாமில் 8 ம் வகுப்பு முதல் ஐடிஐ, பட்டப்படிப்பு, பாலிடெக்னிக் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலருக்கும், மாற்று திறனாளிகளுக்கும் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் பங்கேற் பவர்கள் ரேஷன் கார்டு, கல்விச்சான்று, ஆதார் அட்டை, ஜாதி சான்று ஆகியவற்றை எடுத்துவர வேண்டும் என மாநில ஊரக வாழ்வாதார இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.