சென்னை தனியார் கல்லுாரியில் முதுநிலை படித்து வந்த மாணவர் குமாரை, வேறு கல்லுாரியைச் சேர்ந்த மாணவர்கள் கிண்டல் செய்தனர். இதனால் மனமுடைந்த மாணவர் குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உடல் அவரது சொந்த ஊரான குருவராஜப்பேட்டையில் தகனம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி கூறுகையில், ஏற்கனவே கல்லுாரி மாணவர்களிடையே பல விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லுாரி மாணவர்கள் ரயிலில் சண்டை போடக்கூடாது. பயணிகளுக்கு தொந்தரவு தரக்கூடாது என்று கூறியுள்ளோம். குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் தான் பிரச்னை ஏற்படுகிறது. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தகராறில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.