குறள் : 588

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

மு.வ உரை :

ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை :

ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :

ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.

Kural 588

Otrotrith Thandha Porulaiyum Matrumor
Otrinaal Otrik Kolal

Explanation :

Let not a king receive the information which a spy has discovered and made known to him until he has examined it by another spy.



இன்றைய பஞ்சாங்கம்

02-12-2021, கார்த்திகை 16, வியாழக்கிழமை, திரியோதசி திதி இரவு 08.27 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. சுவாதி நட்சத்திரம் மாலை 04.27 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் மாலை 04.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாதசிவராத்திரி. பிரதோஷம். சிவ - லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 


இராகு காலம்

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 02.12.2021

மேஷம்

இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவர். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் பெறுவீர்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

கடகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உடல் நிலை சிறப்பாக இருந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

கன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் சிறு கருத்து வேறுபாடு தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், மந்த நிலையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தனுசு

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.

மகரம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் உதவியால் எளிதில் செய்து முடிக்க முடியும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,