🌷 1972ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் அப்பல்லோ 17 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

🌷 1995ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.


முக்கிய தினம் :-


கொடி நாள் (இந்தியா)

🌷 இந்தியாவில் கொடி நாள் டிசம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். இத்தினத்தை இந்திய அரசும், இந்திய மாநில அரசுகளும் 1949ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கின்றன.


சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்

🌸 சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் டிசம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. எனவே இதற்காக ஒரு அமைப்பு 1944ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐ.நா. பொதுச்சபை டிசம்பர் 7ஆம் தேதியை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமாக அறிவித்தது.


பிறந்த நாள் :-


ஜெரார்டு குயூப்பர்

👉 வானியல் அறிஞர் ஜெரார்டு குயூப்பர் 1905ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி ஹாலந்தில் உள்ள ஹெரன்காஸ்பெல் கிராமத்தில் பிறந்தார். 

👉 இவர் செவ்வாய் கிரகம், சூரிய குடும்பம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். யுரேனஸ், நெப்டியூன் கிரகங்களின் துணைக் கோள்களான மிரான்டா, நீரிட் ஆகியவற்றைக் கண்டறிந்தவர்.

👉 செவ்வாய் கிரகத்தில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதையும், சனிக் கிரகத்தில் மீத்தேன் வாயு இருப்பதையும் கண்டறிந்தவர். நெப்டியூனுக்கு தொலைவில் இவர் கண்டறிந்த குறுங்கோள்கள், இவரது பெயரால் 'குயூப்பர் பெல்ட்' எனக் குறிப்பிடப்படுகிறது.

👉 நவீன கோள் அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட ஜெரார்டு குயூப்பர் 68வது வயதில் (1973) மறைந்தார்.