குறள் : 634

தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு

மு.வ உரை :

(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும் அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும் துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.

கலைஞர் உரை :

ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.

சாலமன் பாப்பையா உரை :

ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

Kural 634

Theridhalum Therndhu Seyalum Orudhalaiyaach
Chollalum Valladhu Amaichchu

Explanation :

The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking) execute it in the best manner possible and ofer assuring advice (in time of necessity).


இன்றைய பஞ்சாங்கம்

17-01-2022, தை 04, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 05.18 வரை பின்பு தேய்பிறை பிரதமை. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 04.37 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் பின்இரவு 04.37 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்ணமி விரதம். 

இராகு காலம்

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 17.01.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தெய்வ வழிபாடு நல்லது.

சிம்மம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகளிள் இருந்த தடை விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் ஏற்படும்.

துலாம்

இன்று குடும்பத்தில் பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகலாம். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம். கொடுத்த கடன் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.

தனுசு

இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று நீங்கள் எதிலும் உற்சாகமின்றி செயல்படுவீர்கள். நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.



கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,